Tuesday, June 12, 2012

பயணம் - பார்த்ததில் ருசித்தது : பழைய சோறு

ஆமாம் !
இது பழைய சோறுதான் .
திரைப்படம் வந்த உடன் விமர்சனம் எழுதுவது வழக்கமான காலத்தில்
கொஞ்ஞ்ஞ்ஞ்சம் தாமதமாக பார்த்த படத்தை பத்தி பகிருவது பழைய சோறுதான் .


ஏற்கனவே பல சமயங்களில் பார்க்கும்போது தடங்களேற்பட்டு பார்க்க முடியாமல் போன இயக்குனர்  இராதாமோகனின் பயணம் திரைப்படத்தை இப்பொழுதான் ஏதேச்சையாக பார்க்கும் வாய்ப்பு கிட்டியது .


அதுவும் கடந்த முறை விடுபட்ட பகுதியிலிருந்தே காணும் சந்தர்ப்பம் .


75 பேர் பயணம் செய்யும் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது .முக்கிய கோளாறு காரணமாக தரையிறக்கப்படுகிறது .சிறையிலிருக்கும் தனது சக தீவிரவாதியை விடுவிக்க கோரி விமானத்திலிருக்கும் தீவிரவாதிகள் கோரிக்கை வைக்கிறார்கள் .நிறைவேற்றாப்படின் விமானம் வெடித்து சல்லி சல்லியாய் சிதறும் காப்பாற்ற கேப்புட்டன் விசயகாந்த் இல்லை .சிக்கலான தருணம் .ஆளாளுக்கு ஒரு வழி சொல்கிறார்கள் .இறுதியில் என்ன நடந்தது என்பது தான் கதை .


படத்தை பெரும்பாலோனோர் பார்த்திருப்பீர்கள் . மீதி விமர்சனம் செய்தால் சோடா பாட்டில் வீச்சு நடக்கும் என்ற காரணத்தினால் நான் இரசித்தவை குறித்து மட்டும் பகிர்ந்துக்கொள்கிறேன் ...


*  பரபரப்பாக நகரக்கூடிய திரைக்கதை . அதை கையாள வேண்டிய அதிமுக்கிய பொறுப்பும் , திறமையும் இயக்குனரது கடமையென்னும் பணியை செவ்வனே செய்திருக்கிறார் இராதாமோகன் .


* அனைத்து பயணிகளும் , இது , நடிகர்களும் மிக இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர் . பொல்லாதவன் திரைப்படம் போல் அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது .


*  தீவிரவாதியாக மொட்டைத் தலையுடன் வரும் நடிகர் மிரட்டுகிறார் . மிக மிக பொருத்தமான தேர்வு . எங்கிருந்து ஐயா புடிச்சீங்க அவர ????


* இன்னும் எத்தன படத்துக்கு தான் மோகன் வி இராம் ஐயரா நடிப்பாரோ தெரியல . மோகன் வி இராம் இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் பெரியப்பா என்பது கூடுதல் தகவல் . இவருக்கும் எனக்கும் சில வருடங்கள் முன்பு பேஸ்புக்கில் கருத்து மோதல் நடந்தது கூடுதல் மொக்கை தகவல் .


* எம்.எஸ்.பாஸ்கர் .................................
  படத்தில் இவரது நடிப்பு  பெரிதா , கதாபாத்திரம் சிறப்பானதா என பெரிய பட்டிமன்றமே நடத்தலாம். அவ்வளவு நேர்த்தி . பாதிரியாராக பிச்சு உதறியிருக்கார் . ஒவ்வொரு காட்சியும் சிறப்பு . நான் பைபிள் படிக்க வேண்டும் என்று தீவிரவாதிகளிடம் அனுமதி கேட்கும் பாதிரியார் எம்.எஸ்.பாஸ்கர், பரவாயில்லை குரான் இருந்தால் கொடுங்கள் அதைப் படிக்கிறேன் , இரண்டிலும் ஒன்று தான் சொல்லப்பட்டிருகிறது என்று சொல்வது நெகிழ்ச்சி . மதவியாதிகளா இந்த வசனத்துக்கு தூக்குல தொங்குங்க . பிரார்த்தனை செய்ய கோரும் போதும் , அதை எல்லாருக்கும் கேட்கிற மாதிரி சத்தமாக சொல்லுங்கள் என மோகன் இராமன் கேட்கும்போதும் ...... அருமை . இறுதியாக இறந்து போனவருக்காக இறுதி பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் விட்டு அழுகிறார்கள் , படத்தில் . அழுகை வரக்கூடிய பகுதி அது .
அவர் செய்த மிக நுணுக்கமான தவறு - முதலில் தென்னிந்திய திருச்சபை பாதிரியாரை போல பிரார்த்தித்தவர் , இறுதி செபத்தில் கத்தோலிக்க குருக்களை போல செபிக்கிறார் . ( கவனிக்க : மொழித் தொடர் - பேச்சு வழக்கு ) கலைஞன் ஐயா நீங்க ...


* ஐயோ என கத்துவதை தவிர வேற பதட்டம் ஏதும் இல்லை பயணிகளிடம்


* ரிஷி - நீங்க மருத்துவரா என நம்புவதே கடினமா இருக்கு .


* தலைவாசல் விசய் ஐயா - நல்ல நடிப்பு , நல்ல கதாபாத்திரம் .


* வசனம் சும்மா சொல்லக்கூடாது . செதுக்கியிருக்கார் .
( உதா : தீவிரவாதி ஒருவன் "ஏன் கத்துகிறீர்கள். விமானத்தில் இருக்கும் பெண்களுக்கு எங்களால் ஆபத்து வந்ததா? உங்கள் நாட்டு போலீசிடம் ஒரு பெண்ணை மூன்று நாட்கள் தனியாக விட்டால் அவளுக்கு பாதுகாப்பு உண்டா?" என சொல்லும் சுளீர் வசனம் )


* சோசியரான இயக்குனர் மனோபாலா அருகில் பயணிக்கும் இளங்கோ குமாரவேல் ( அழகிய தீயே படத்தில் சித்தப்பா ) அருமையான வசன வெளிப்பாடு . அர்த்தம் பொதிந்த வசனங்கள் .


* சம்ஸ் - இந்த பெயர் யாருக்காவது தெரியுமா ????? அறை எண் : 105 ல் கடவுள் படத்தில் ஜாவா சுந்தரமாக வருவாரே , அவரேதான் . சைனிங் ஸ்டார் ஒரு டுபாக்கூர் எனத் தெரிந்ததும் அவரது உடல் மொழியை கவனிக்கணுமே ..... வடசென்னையில நீயெல்லாம் ஒரு ஆளா என்கிற கணக்கா நக்கலாக அமர்ந்திருப்பார் . வாரு வாரு என நடிகர்களை வாருகிறார் . '  நடிகராக வரும் பப்லூவிடம் "என்ன சார். என்னை அடிக்க போறீங்களா? அடிங்க. டெய்லி என் பொண்டாட்டி அடிக்கறா. நாலு வயசு பையன் கூட அடிக்கறான். அடிங்க"  என ரவுசு விடுவது, நல்ல கலகலப்பு . நல்ல நடிப்பு . சினிமாவை சினிமாவிலேயே கிண்டலடிக்க சினிமாவால் தான் முடியும் .


* பப்லு சைனிங் ஸ்டார் சந்திரகாந்தாக வந்து கலாய்க்கப்படுகிறார் , கிழிக்கப்படுகிறார் .


* பிரகாச்ராச் - அருமையான கோவமான நடிப்பு .


* நாகார்சூனா - தலைவா ....... வா வா ........ கலக்கல் கதாநாயகத்தனம் . அந்த பார்வையே போதும் அவர் நடிக்க . கெத்தான நடிப்பு . அமலாவை கேட்டதா சொல்லுங்க ஐயா .


* லடாக் தீவிரவாத தாக்குதல் காட்சி மிக இயல்பாக உள்ளது .. உறுதுணை மேசர் இரவியா ??? ;)


* யூசுப்கானை அழைத்து வரும் பனி மலை காட்சி மிக கொடுமையான செயற்கைத்தனம் .


* தப்பிக்க சமிக்ஞை அனைவருக்கம் பரப்பப்படும் போது அங்கே தீவிரவாதிகள் எங்கே போனார்கள் . குசுகுசுன்னு பேசும்போது கண்டுப்பிடிக்கவோ , அமைதியாக இருக்க சொல்லி மிரட்டவோ மாட்டார்களா ????  - தர்க்கவியல் பிழை


*  பிரம்மானந்தம் -  பிர(ம்)மா(னந்)தம் . பார்த்தாலே சிரிப்பு வருகிறது . மன்னிச்சுக்குங்க . நல்ல கதாபாத்திரம் .


* இரங்கராசனாக , யூசுப்கானாக நடிக்கும் தம்பி எடுபடவில்லை . பிஞ்சு மூஞ்சிப்பா உனக்கு .


*  அது ஏன் இராதாமோகன் ஐயா வசன உச்சரிப்பு நேர்த்தியா இருக்கணும்னு கடைசியில இப்படியாயிடுச்சு . எச்சில் விழுங்குவது கூட தெளிவாக கேட்கிறது .காதுக்குள் ஊசியால் குத்துவது போன்று இருக்கிறது . சரியான பின்னணி குரல் கொடுப்பவரை தேர்ந்தெடுத்திருக்கலாம் . விமான நிலையத்தில் நுழையும் செய்தியாளர் , நாகார்சூன் ஆகியோருக்கு சரியில்லை .பல இடங்களில் கதாபாத்திரங்களும் உச்சரிப்பும் , உதட்டசைவும் சொதப்புகின்றன .


* அது என்னவோ தெரியல மிகச் சிறப்பான படமாக இருந்தாலும் ஏதோ ஒரு முழுமை இல்லை . என்னன்னு தான் தெரியல .


* இறுதியாக , கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் முன் நின்று பாதிரியார் எம் எஸ் பாஸ்கர் செபம் சொல்கிறார் . நெகிழ்வு .
அதே வேளையில் , கட்டுநாயகே விமான தளத்தை புலிகள் தாக்கியபோது எம் மாவீர செல்வங்களின் உடலை குப்பை வண்டியில் நிர்வாணமாக ஏற்றிச்சென்றதை மறக்க முடியவில்லை .


சிறப்பான படம் .......


நீங்களும் உங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொள்ளலாம் .
அனுப்ப வேண்டிய முகவரி : பிசாசுக்குட்டியின் உள்டப்பி .
இல்லை பேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு சொல்லியனுப்புங்கள் . ஆள் வந்து எடுத்து செல்வார்கள் தளத்திற்கு .


( வார்த்தை கையாள்வதில் உதவி : சென்னைபவன் வலைப்பூ )


அம்புடன் ,
பிசாசுக்குட்டி ( எ ) பிகே ( எ ) அறிவுநாயகம்